ஆட்சி உச்ச கிரக திசா புத்திகளும் நீசம் பகை வக்கிர கிரக திசா புத்தி பலன்

Tuesday 30 July 2019


கிரகங்களில் சூரியனை முதன்மை கிரகமாக அங்கீகரிக்க ஒரு காரணமும் உண்டு.....

கிரகங்களுக்கு சுயமாக ஒளிரும் சுயஒளி தன்மை உண்டா?

சிந்தியுங்கள் பெரியவர்களின் அருமையான 27 நட்சத்திர குட்டங்களின் அறிய கண்டுபிடிப்பு தெரியவரும்....

கிரகம் அமர்ந்த வீடு, வீடு கொடுத்தோன், கிரகம் ஆட்சி உச்சம் நீசம் நட்பு வீடு என்பது ஆரம்ப கல்வி மட்டுமே என்பது தெரியவரும்...

ஜோதிடம் அனுமானம் வரை மட்டுமே இன்று நிற்பதற்கான காரணங்கள் தெரியவரும்....

ஒரு டிப்ஸ்:
1....சூரியன் ஒரு நட்சத்திரம்......
2....சாரம் பாரான் சோரம் போவான்......
3 ....மருத்துவன் கையை பார்க்கணும் ஜோதிடன் காலை பார்க்கணும்....

பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்.....

ஆட்சி உச்ச கிரகங்கள் பலன் தருமா? நீசம் பகை வக்கிரம் கிரகங்கள் பலன் தராதா?


உங்கள் ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களா? ஜோதிடர் ஆட்சி உச்சம் பெற்ற கிரக திசா புத்தி சிறப்பாக இருக்கும் ஆ ஊ என்று கூறினாரா? அதிகப்படியான சந்தோஷம் கொள்ள வேண்டாம்......

உங்கள் ஜாதகத்தில் வக்கிரம் நீசம் அஸ்தங்கதம் பகை பெற்ற கிரகங்களா? வருத்தம் கொள்ள வேண்டாம். ஜோதிடர் சொன்னது பொய்யாகலாம் ....

வலுவான கிரகங்கள் தனது கிரக திசா புத்தியில் கெடுபலன்களை தரலாம் / வலுவிழந்த கிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் சிறப்பான பலன்களை தரலாம் என்பதே உண்மை..

ஒரு கிரகம் ஆட்சி உச்சம் நட்பு வீட்டில் என்றால் அந்த கிரகத்தின் திசா புத்தி அருமையான பலன்கள் கிட்டும் என்பது உண்மையா?

ஒரு கிரகம் நீசம் பகை கிரக வீட்டில் என்றால் அந்த கிரக திசா புத்தி நன்மையை தராதா?

ஒரு கிரகத்தின் வலு மற்றும் வலுவின்மை என்பதை எவ்வாறு அறிவது?

குரு பார்வை அ சுப கிரகங்கள் சேர்க்கை வைத்து வலு வலுவின்மையை தீர்மானம் செய்யலாம் என்ற கான்செப்ட் வேண்டாம். அது முழுமையான வலு மற்றும் வலுவின்மை என்பதின் தீர்க்கமல்ல?

கிரகம் வலு என்றால் மேலும் வலு சிறப்பு எனலாம். கிரகம் வலுவின்மை என்றால் இந்த குரு பார்வை அ சுப கிரகங்களின் சேர்க்கையை ஒரு சிறப்பு எனலாம்....

ஆனால் முழுமையான பலன் இல்லை என்பதை அறியவும். மேலும் இந்த பதிவு பாரம்பரியம் எனப்படும் வேத ஜோதிட முறை மட்டுமே என்பதையும் இங்கு மென்ஷன் செய்ய விரும்பிக்கிறேன்.....

ஒரு டிப்ஸ்:
(மாணவர்களின் சிந்தனைக்கு / ஆர்வலர்களுக்கு இன்னொரு பதிவில் விளக்கம் காணலாம் )
1....சாரம் பாரான் சோரம் போவான்...
2.....மருத்துவன் கையை பார்க்கணும் ஜோதிடன் காலை பார்க்கணும்......
பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்....

ராகு கேது உச்சம் நீசம் வீடுகள் / ராகு கேது நீச வீட்டில் பலம் குறைவா /



ஜோதிடம் அறிவியலா? அனுமானமா? ஜோதிடம் அறிவியல் சார்ந்தது அதை உணர வேண்டும் என்பவர்களுக்கான பதிவு....

புத்தக மனப்பாட நபர்கள் மற்றும் புத்தகத்தில் சொல்லப்பட்ட விதிகள் விதிவிலக்குகள் வகையில் அப்படியே பலன் காணும் நபர்களும் இந்த பதிவை தவிர்க்கலாம்....

ராகு கேது உச்ச நீச வீடுகள் சர்ச்சை.....

ராகு கேது நீச்ச வீட்டில் இருந்தால் அல்லது பகை வீட்டில் இருந்தால் தனது பலம் இழந்து விடுவார்களா?...

சரி ராகு-கேதுக்களுக்கு உச்ச நீச்ச வீடுகள் தான் என்ன?....

நீச்ச வீட்டில் அல்லது பகை வீட்டில் இருந்தால் தனது வலுவை இழந்து விடுவார்களா?

ஒவ்வொரு மூல நூல்களும் ராகு கேது உச்ச நீச்ச வீடுகளைப் பற்றி என்ன சொல்கின்றன?

எந்தெந்த மூல நூல்களில் ராகு கேது உச்சம் நீச்சம் பற்றி ஒரே மாதிரி சொல்லப்பட்டுள்ளது?

கீழ் உள்ள கிரகங்களின் உச்சம் நீச்சம் அட்டவணையில் ஒரு அற்புதமான உண்மை உள்ளது....

இந்த கேள்வி அதாவது இந்த பதிவு ஜோதிடம் அனுமானம் இல்லை அறிவியல் என்பதை உணர முதல் படி.....

பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்.....

எது ஜோதிடம் யார் ஜோதிடர் போலிகளை கண்டு ஏமாறாதீர் / பரிகாரம் பலன் தருமா



இன்னும் 6 மாதம் ஒரு வருடத்தில் யாருக்கெல்லாம் நல்ல காலம் நடக்கபோகுது தெரியுமா? ஜோசியர் சொல்லிருகாரா?

இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் / இன்னும் 6 மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்கலும் ஈடேறும் / இன்னும் 1.5 வருடத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் அனைத்தும் நடக்கும் சுப காலம் கவலை வேண்டாம்.......

வக்கிர கதியில் இருக்கும் குரு நிவர்த்தி பொரும்பொழுது ஈடேறும்.....

நடப்பு சனி திசாவின் கேது புத்தி சிறப்பான நிலையில் இல்லை இன்னும் ஒரு வருடத்தில், சுக்கிரன் புத்தியில்....

குரு திசாவில் குரு புத்தி சுய புத்தி நன்மை செய்யாது. குரு திசையில் சனி புத்தி சனி சிறப்பான நிலையில், அடுத்த 6 மாதத்தில் ஈடேறும்.....

நீங்க நெனச்சேதெல்லாம் நடகுமுன்கோ.....

கொஞ்சம் யோசிக்கவும்....

சிறப்பான நிலையென்றே வைத்து கொள்ளுவோம் ஆனால் நெனச்சேதெல்லாம் நடக்குமா?

எது நடக்கும்? எது நடக்காது? எதை எதிர்பார்க்கலாம்? எதை எந்த அளவு எதிர்பார்க்கலாம்? மாற்று வழி செய்ய வேண்டுமா?....

முதலில் 6 மாதம் 1 வருஷத்தில் நீங்க நெனச்சது நினைத்தபடி நடக்கும் என சொல்பவர்களை நம்பாதீங்க....

நீங்க ஏமாற்றபடுகிறீர்! நீங்க ஏமாற்றபடுகிறீர்!

என்பதே உண்மை.....

பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்.....


நாடி ஜோதிட கிரக சேர்கை விதிகள் vs வேத ஜோதிட கிரக சேர்க்கைகள் / nadi astrology principals


ராகு கேது சேர்க்கை பெரும் கிரகங்களை எவ்வாறு அறிவது?....

நவகிரகங்கள் சேர்க்கை அமர்ந்த ராசியில் சேர்க்கை பெரும் கிரகங்கள் மட்டுமா?

உதாரணம்:

மீனத்தில் நீர் ராசியில் ராகு சூரியன் குரு விரிச்சிகம் நீர் ராசியில் சனி......

ராகு சேர்க்கை சூரியன் குரு உடன் மட்டுமா? அல்லது சூரியன் குரு சனியுடனா?

ராகு சூரியன் குரு சனி புதன் மற்றும் சுக்கிறனுடனா?

பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்......

பிருகு நந்தி நாடி ஜோதிடம் / bhrigu nandi nadi astrology / கிரக சேர்கை பலன்கள் / ராகு சேர்கை


அடிப்படை ஜோதிடம்.....
Vedic + Nadi....

இந்த ஜாதகத்தில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் கிரகம் எது?.....

கிரகங்கள் நின்ற சார நாதன் அந்த சாரநாதன் சேர்க்கை வரை கூட தேவையென்றால் ஆராயலாம்....

இந்த ஜாதகத்தில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் கிரகம் எது?

பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்.....

ஏழரை சனி அஷ்டமசனி பெயர்ச்சி கோட்சார பலன்கள் உண்மையா / elarai sani ashtamasani effects



7.5 சனி பாதிப்பு உண்மையா? இல்லை திசா புத்தி பலன் கணிக்க தவறும் அ தெரியாத ஜோதிடர்களின் சமாளிப்பு யுக்தியா?

அடிப்படை ஜோதிடம்:
திசா புத்தி பலன்கள் vs கோட்சார பெயர்ச்சி பலன்கள்..

விருச்சிக ராசிக்கு 7.5 நாட்டு சனி இன்னும் ஒரு சில மாதங்களில் முடிய போகிறது.....

விரிச்சிக ராசியில் பிறந்தவர்கள் இந்த உலகில் 80 கோடி மக்கள் உண்டு.....
அதில் சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் உண்டு. மாத சம்பளம் செல்லும் நபர்கள் உண்டு. கல்வி பயிலும் மாணவர்கள் உண்டு....

வயது வாரியாக சொல்லிகிட்டே இருக்கலாம்....

ஏழரை சனியால் கடந்த 7 வருடமாக வெறும் கெடுபலன்களை மட்டுமே சந்தித்து இருப்பார்களா?

தங்கள் Personnal and official வாழ்க்கையில்?

ஆம் சந்தித்து இருப்பார்கள் என்றால் அது முட்டாள்தனம்....

இருக்க வாய்ப்பு இல்லை என்றால் அது புத்திசாலிதனம். அறிவுக்கு மூளைக்கு புத்தியை பயன்படுத்தி ஆராய்ச்சி ஆய்வு செய்யும் வேலையை தருகிறோம் எனலாம்....

இது ஜோதிடம் அனுமானம் இல்லை அறிவியல் என்ற எண்ணத்திற்கு ஆய்விற்கு முதல் படி முதல் தீனி எனலாம்....

பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்...

சனி திசா நன்மை தருமா / sani thisa palangal / லக்ன சுபர் லக்ன அசுபர் / சனி திசை பலன்


அடிப்படை ஜோதிடம்:

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி 10 11 ஆம் வீட்டுக்கு உடையவன்.....

லக்கினாதிபதி செவ்வாய்க்கு சனி பகைவன். அதாவது லக்கின அசுபர். மேலும் லக்கின பாதகாதிபதியும் சனி பகவான் ஆகிறார்......

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த உலகில் 80 கோடி மக்கள் உண்டு.....

சனி திசாவில் அ புத்தியில் கெடு பலன்களை மட்டுமே அனுபவித்து இருப்பார்களா?....

லக்கின அசுபர்.....

பாதகாதிபதி.....

சனி திசா புத்தி சிறப்பை தராது...

ராகு திசா கெடுக்கும் குரு திசா கொடுக்கும். கேது திசையில் திருமணம் செய்ய கூடாது. இளவயது சுக்கிர திசா கெடுக்கும். குரு திசையில் குரு சுயபுத்தி பலன் தராது etc....

போன்ற பொது பலன்கள் அனைத்தும் ஜோதிடத்தில் களையப்பட வேண்டிய குப்பை.....
காரணம் பொது பலன்கள் மட்டுமே இன்று முதன்மை பலனாகவும், கேள்விகளாகவும் உள்ளது..

பெரியவர்கள் சேர்த்து வைத்த சொத்து ஜோதிடம். ஆராய்ச்சி ஆய்வுகள் மூலம் ராசி நட்சத்திரம் முதல் லக்னம் திசா புத்தி என்று எவ்வளவோ விசயங்கள்.....

இன்று பொது பலன்கள் ராசி பலன்கள் நட்சத்திர பலன்கள் என பெரியவர்கள் சேர்த்து வைத்த சொத்தே இங்கு முழுமையாக பயன்பாடு இல்லாமல் இருக்கிறது.....

அதிகப்படியாக கிரக பெயர்ச்சி பலன்களே எங்கும். திசா புத்தி என்ற வளம் தரும் நிலம் தரிசு நிலமாக கிடக்கிறது. பயன்பாடு பொதுபலன் வகையில் மட்டுமே....

பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்.....

ராகு கேது கிரக சேர்கை பலன்கள் / rahu ketu planatery conjunction / ராகு கேது வலிமை


உங்கள் ஜாதகத்தில் ராகு கேது ஜாம்பவான்களின் சேர்க்கையை அறிக.....

இந்த ஜாதகத்தில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் கிரகம் எது? முன் கேள்வி பதிவிற்கான பதில் பதிவு.....

அடிப்படை ஜோதிடம்:
Vedic + Nadi

Vedic + Nadi இரண்டிலும் சொல்லப்பட்ட விதி:

ஒரு கிரகம் உச்சம் பெற்றாலும் சரி ஆட்சி பெற்றாலும் சரி ராகு அ கேதுவுடன் சேர்க்கை பெரும்பொழுது தனது உச்சம் ஆட்சி பலனில் வலுவை இழக்கும் என்பதே உண்மை........

இங்கு குரு ஆட்சி பெற்றபொழுதும் ராகு சேர்க்கையில் மேலும் சூரியன் நட்பு வீடான குருவின் மீனத்தில் இருந்தாலும் பகை கிரகமான (9 கிரகங்களில் ஜாம்பவான்கள் ராகு கேது) ராகு சேர்க்கையில் என்பதால் தனது வலுவை இழக்கிறார்.....

நாடி ஜோதிட விதிகள்:

எந்த ஒரு கிரகமும் தனித்து இயங்காது. ஒரு காராக கிரகம் அமர்ந்த ராசியிலிருந்து எண்ணி வரும் 1579 / 2 / 311 ஆம் ராசிகளில் உள்ள கிரகங்களுடன் சேர்க்கை பெற்றே பலன் தரும்.....

ராகு கேது அமர்ந்த ராசியிலிருந்து எண்ணி வரும் 159 / 2 (பின்புறமாக) ராசிகளில் உள்ள கிரகங்களுடன் சேர்க்கை பெரும்.....

ராகு கேதுவுடன் சேர்க்கை பெரும் கிரகங்கள் தனது கிரக காரகங்களையும் கிரகம் குறிக்கும் ஆதிபத்திய காரகங்களின் வலுவையும் இழக்கும் என்பதே உண்மை......

மீனம் வடக்கு திசை ராசி மற்றும் நீர் ராசி ராகு அமர்ந்த ராசியிலிருந்து எண்ணி வரும் 5 ஆம் ராசியான விரிச்சிகம் வடக்கு திசை மற்றும் நீர் ராசியில் உள்ள சனி பகவானும் ராகு சேர்க்கையில் என்பதை கவனிக்கவும்......

எதிர்த்திசையில் உள்ள (2) புதன் சுக்கிரன் ராகு சேர்க்கையில் (பிடியில்) என்பதை கவனிக்கவும்.....

எதிர்த்திசையில் உள்ள (3) சந்திரன் ராகு சேர்க்கையில் (பிடியில்) என்பதை கவனிக்கவும்.....

எந்த கிரகத்தின் திசா புத்தியாக இருக்கலாம். இன்னும் ஒரு படி துல்லியமாக என்றால் ஒரு கிரகம் தான் நிற்கும் நட்சத்திரம் அந்த நட்சத்திரத்திற்கு உரிய கிரகத்தின் ஆதிபத்தியங்கள் வேலையை, அந்த கிரகம் அமர்ந்த பாவத்தின் காரகங்களை 70% முதன்மையாக செய்யும்.......

எந்த கிரகமானாலும் சரி ராகு பிடியில் + செவ்வாய் திசா அ புத்தி என்றாலும் செவ்வாயும் சுக்கிரன் சாரம் (பரணி 4 ஆம் பாதம் ) அந்த சுக்கிரனும் ராகு சேர்க்கை (பிடியில்) என்பதை அறிக......

ராகு மற்றும் கேதுவை எதிர்த்து நிற்க இயலாது. ஒரே வழி ராகுவின் காலை ( காரகங்களை ) பற்றுதலே சிறப்பு எனலாம்......

அகவாழ்க்கை மற்றும் புரவாழ்க்கை ராகு காரகங்கள் வகையில் அமைத்து கொள்ளுதல் சிறப்பு.....

ராகு புரவாழ்கையை நல்கும் யோகவான். அகவாலகை ராகு காரகங்கள் வழியே அமைத்து கொண்டால் ஓடும் எனலாம்....

குறிப்பு:

இது Vedic +Nadi ஜோதிட அடிப்படை பலன்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஜாதகர் பிறந்த நேரம் நிமிடம் வினாடி என துல்லியமாக கணித்த பாவ ரீதியான துல்லியமான பலன்கள் இல்லை என்பதையும் இங்கு மென்ஷன் செய்ய விரும்புகிறேன்.....

ஒரு ஜாதகத்தின் துல்லியமான பலன்கள் அறிய Vedic + Nadi + Kp அட்வான்ஸ் வரை ஆராய்ந்தாலே முழுமையான துல்லியமான பலன்கள் கிட்டும் என்பதையும் இங்கு மென்ஷன் செய்ய விரும்புகிறேன்....

பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்....

ஆட்சி உச்ச கிரகம் நன்மை தருமா? நீசம் பகை கிரகம் தீமை தருமா? திசா புத்தி பலன்

Monday 29 July 2019


உங்கள் ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களா? அதிகப்படியான சந்தோஷம் கொள்ள வேண்டாம்......

உங்கள் ஜாதகத்தில் வக்கிரம் நீசம் அஸ்தங்கதம் பகை பெற்ற கிரகங்களா? வருத்தம் கொள்ள வேண்டாம்....

வலுவான கிரகங்கள் தனது கிரக திசா புத்தியில் கெடுபலன்களை தரலாம் / வலுவிழந்த கிரகங்கள் தனது திசா புத்தி காலங்களில் சிறப்பான பலன்களை தரலாம் என்பதே உண்மை..

ஒரு கிரகம் ஆட்சி உச்சம் நட்பு வீட்டில் என்றால் அந்த கிரகத்தின் திசா புத்தி அருமையான பலன்கள் கிட்டும் என்பது உண்மையா?

ஒரு கிரகம் நீசம் பகை கிரக வீட்டில் என்றால் அந்த கிரக திசா புத்தி நன்மையை தராதா?

ஒரு கிரகத்தின் வலு மற்றும் வலுவின்மை என்பதை எவ்வாறு அறிவது?

குரு பார்வை அ சுப கிரகங்கள் சேர்க்கை வைத்து வலு வலுவின்மையை தீர்மானம் செய்யலாம் என்ற கான்செப்ட் வேண்டாம். அது முழுமையான வலு மற்றும் வலுவின்மை என்பதின் தீர்க்கமல்ல?

கிரகம் வலு என்றால் மேலும் வலு சிறப்பு எனலாம். கிரகம் வலுவின்மை என்றால் இந்த குரு பார்வை அ சுப கிரகங்களின் சேர்க்கையை ஒரு சிறப்பு எனலாம்....

ஆனால் முழுமையான பலன் இல்லை என்பதை அறியவும். மேலும் இந்த பதிவு பாரம்பரியம் எனப்படும் வேத ஜோதிட முறை மட்டுமே என்பதையும் இங்கு மென்ஷன் செய்ய விரும்பிக்கிறேன்.....

ஒரு டிப்ஸ்:
1....சாரம் பாரான் சோரம் போவான்...
2.....மருத்துவன் கையை பார்க்கணும் ஜோதிடன் காலை பார்க்கணும்......

பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்.....





திருமண பொருத்தம் / MARRIAGE MATCHING / தசவித பொருத்தம் ஜாதக பொருத்தம் போதுமா?

திருமண பொருத்தம்
1௦ நட்சத்திர பொருத்தமும் பார்த்துதான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது......
பஞ்சாங்கம் பார்த்து ஆணுக்கும் பெண்ணுக்கும் சந்திராஷ்டமம் போன்ற அசுப நாட்கள் தவிர்த்து தான் ஒரு சுப முகுர்த்த தினத்தில் திருமணம் போன்ற சுப காரியம் நிகழ்த்தப்படுகிறது......
ஏன அனைத்தும் சிறப்பாக கவனித்து செய்த திருமணமும் கோர்ட் கேஸ் என இன்று நிற்கிறது?
ஆக அடிப்படையில் திருமண பொருத்தம் என்ற பெயரில் சேர்க்கப்படும் இரண்டு ஜாதகங்களில் எங்கோ தவறு உள்ளது என்பதை அறிக.....
திருமண பொருத்தம்:
1.....1௦ நட்சத்திர பொருத்தம் என்ற தசவித பொருத்தம் பார்த்தல் மட்டும் போதுமா?
2......ஜாதக அமைப்பு என்னும் கிரக அமர்வுகள் குரு முதல் 9 கிரகங்கள் ( ராகு கேது தோஷம் செவ்வாய் தோஷம் ) ஆராய்வு செய்தால் மட்டும் போதுமா?
இரு ஜாதகங்கள் ஆராய்ந்து ஆண் பெண் இருவரும் ஒருமித்த தம்பதிகள் என எவ்வாறு அறிவது? திருமணத்திற்கு பிறகு எந்த விதமான கெடு பலன்களும் தம்பதியர் வாழ்வில் நிகழா வண்ணம் எவ்வாறு இரு ஜாதகங்களையும் பொருத்துவது? தேர்ந்தெடுப்பது?
சரி இந்த தசவித பொருத்தம் அதாவது நட்சத்திர பொருத்தம் ஜோதிடம் வகுத்த பெரியவர்களால் காலாகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்ததா? அல்லது சிலரின் இடை செருகல்களா?
பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்....