ராகு கேது கிரக சேர்கை பலன்கள் / rahu ketu planatery conjunction / ராகு கேது வலிமை

Tuesday 30 July 2019

உங்கள் ஜாதகத்தில் ராகு கேது ஜாம்பவான்களின் சேர்க்கையை அறிக.....

இந்த ஜாதகத்தில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் கிரகம் எது? முன் கேள்வி பதிவிற்கான பதில் பதிவு.....

அடிப்படை ஜோதிடம்:
Vedic + Nadi

Vedic + Nadi இரண்டிலும் சொல்லப்பட்ட விதி:

ஒரு கிரகம் உச்சம் பெற்றாலும் சரி ஆட்சி பெற்றாலும் சரி ராகு அ கேதுவுடன் சேர்க்கை பெரும்பொழுது தனது உச்சம் ஆட்சி பலனில் வலுவை இழக்கும் என்பதே உண்மை........

இங்கு குரு ஆட்சி பெற்றபொழுதும் ராகு சேர்க்கையில் மேலும் சூரியன் நட்பு வீடான குருவின் மீனத்தில் இருந்தாலும் பகை கிரகமான (9 கிரகங்களில் ஜாம்பவான்கள் ராகு கேது) ராகு சேர்க்கையில் என்பதால் தனது வலுவை இழக்கிறார்.....

நாடி ஜோதிட விதிகள்:

எந்த ஒரு கிரகமும் தனித்து இயங்காது. ஒரு காராக கிரகம் அமர்ந்த ராசியிலிருந்து எண்ணி வரும் 1579 / 2 / 311 ஆம் ராசிகளில் உள்ள கிரகங்களுடன் சேர்க்கை பெற்றே பலன் தரும்.....

ராகு கேது அமர்ந்த ராசியிலிருந்து எண்ணி வரும் 159 / 2 (பின்புறமாக) ராசிகளில் உள்ள கிரகங்களுடன் சேர்க்கை பெரும்.....

ராகு கேதுவுடன் சேர்க்கை பெரும் கிரகங்கள் தனது கிரக காரகங்களையும் கிரகம் குறிக்கும் ஆதிபத்திய காரகங்களின் வலுவையும் இழக்கும் என்பதே உண்மை......

மீனம் வடக்கு திசை ராசி மற்றும் நீர் ராசி ராகு அமர்ந்த ராசியிலிருந்து எண்ணி வரும் 5 ஆம் ராசியான விரிச்சிகம் வடக்கு திசை மற்றும் நீர் ராசியில் உள்ள சனி பகவானும் ராகு சேர்க்கையில் என்பதை கவனிக்கவும்......

எதிர்த்திசையில் உள்ள (2) புதன் சுக்கிரன் ராகு சேர்க்கையில் (பிடியில்) என்பதை கவனிக்கவும்.....

எதிர்த்திசையில் உள்ள (3) சந்திரன் ராகு சேர்க்கையில் (பிடியில்) என்பதை கவனிக்கவும்.....

எந்த கிரகத்தின் திசா புத்தியாக இருக்கலாம். இன்னும் ஒரு படி துல்லியமாக என்றால் ஒரு கிரகம் தான் நிற்கும் நட்சத்திரம் அந்த நட்சத்திரத்திற்கு உரிய கிரகத்தின் ஆதிபத்தியங்கள் வேலையை, அந்த கிரகம் அமர்ந்த பாவத்தின் காரகங்களை 70% முதன்மையாக செய்யும்.......

எந்த கிரகமானாலும் சரி ராகு பிடியில் + செவ்வாய் திசா அ புத்தி என்றாலும் செவ்வாயும் சுக்கிரன் சாரம் (பரணி 4 ஆம் பாதம் ) அந்த சுக்கிரனும் ராகு சேர்க்கை (பிடியில்) என்பதை அறிக......

ராகு மற்றும் கேதுவை எதிர்த்து நிற்க இயலாது. ஒரே வழி ராகுவின் காலை ( காரகங்களை ) பற்றுதலே சிறப்பு எனலாம்......

அகவாழ்க்கை மற்றும் புரவாழ்க்கை ராகு காரகங்கள் வகையில் அமைத்து கொள்ளுதல் சிறப்பு.....

ராகு புரவாழ்கையை நல்கும் யோகவான். அகவாலகை ராகு காரகங்கள் வழியே அமைத்து கொண்டால் ஓடும் எனலாம்....

குறிப்பு:

இது Vedic +Nadi ஜோதிட அடிப்படை பலன்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஜாதகர் பிறந்த நேரம் நிமிடம் வினாடி என துல்லியமாக கணித்த பாவ ரீதியான துல்லியமான பலன்கள் இல்லை என்பதையும் இங்கு மென்ஷன் செய்ய விரும்புகிறேன்.....

ஒரு ஜாதகத்தின் துல்லியமான பலன்கள் அறிய Vedic + Nadi + Kp அட்வான்ஸ் வரை ஆராய்ந்தாலே முழுமையான துல்லியமான பலன்கள் கிட்டும் என்பதையும் இங்கு மென்ஷன் செய்ய விரும்புகிறேன்....

பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்....

0 comments:

Post a Comment